பகலுணவு | Lunch | දිවා භෝජනය

பெருங்கடல் மீனும்
நல்ல புளியாணமும்
வெண்டிப்புளிச்சாறும்
நல்லரிசிச்சோறும்

வண்ணநடைபோடும்
அன்னநடை வாத்தும்
தண்ணீர் நாடும் தாராவும்
மண்ணை கிளறி புழுதி
முகரும் கோழியும்

தரை கொத்தி உரமிட்ட
வீட்டு மரத்தோட்டமும்
கொல்லை மாதுளையும்
கொய்யா முதலிய
நாட்டு வாழையும்.

என்முறை விடுமுறையாயினும்
உண்டே களித்து புசித்திடுவேன்
இறைவா என்றும்
உன்னிடமே வேண்டிடுவேன்


A lunch of delicious rice
with fresh fish from the ocean
and okra rich with tamarind —

The waddling duck with its colourful clothes
the heron which dances on the water
and the hens which scrape and peck at the soil —

The fruits which flourish on well manured
ground in the orchard: pomegranates,
guava and the local banana —

As soon as the holidays arrived
I would joyfully eat all these foods
always praying to you my God.

(Translated by Shash Trevett)


මහ මුහුදේ මාළු සමඟ රසවත් බත
අලංකාර ගමනේ යන පාත්තයෝ
ජලය කරා යන තාරාවන්
පස හාරා දූවිලි අවුස්සන කිකිළියන්

පොහොර දමා සැකසූ ගෙවත්ත
දෙළුම් පේර සහ කෙසෙල් ද

නිවාඩු කාලයේ දී
රස බලමි සියල්ල
දෙවියන් අයදිමි නුඹගෙන්

(Translated by Ramzy Razeek)